ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் ஒரு நாகரிகமே அழியும் என ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகமாகிட்டே இருக்கு. இதுக்கு நடுவுல, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்னும் முத்திப் போயிருக்கு. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மறுபடியும் ஒரு ஸ்ட்ராங்கான வார்னிங் கொடுத்திருக்கார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ள எந்த ஒப்பந்தமும் செய்யலைன்னா, “ஒரு நாகரிகமே அழியக்கூடிய” அளவுக்கு நிலைமை மோசமாகலாம்னு சொல்லியிருக்கார்.

டிரம்ப் இந்த கருத்தை தனது Truth Social சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நான் இதை விரும்பவில்லை, ஆனால் நிலைமை வேகமாக அந்த திசையில் செல்லக்கூடும். ஒருவேளை நிலைமை மாறினால், அது உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஒப்பந்தத்துக்கான கெடு

வாஷிங்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரைக்கும் (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5:30 மணி) ஈரானுக்கு டிரம்ப் கெடு விதிச்சிருக்கார். இந்த கெடுவுக்குள் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், அந்நாட்டின் ராணுவ மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் கருத்து

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸும் (JD Vance) இதுபத்தி பேசியிருக்கார். “போரின் ராணுவ நோக்கங்கள் பெருமளவுக்கு நிறைவேறிடுச்சு. இனிமே என்ன முடிவு எடுக்கப்படுதுன்னு பார்க்கணும்”னு அவர் சொல்லியிருக்கார். ஈரானின் ராணுவ பலம் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரசீக வளைகுடாவில் அதன் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் வேன்ஸ் கூறியுள்ளார். இனி ஈரான் மக்கள் மற்றும் அதன் தலைமைதான் அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்க் தீவு மீது பெரிய தாக்குதல்

கிடைக்கிற தகவல்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானோட பல முக்கிய இடங்களை குறிவெச்சு தாக்கியிருக்கு. இதுல, ஈரானோட மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவும் (Kharg Island) அடங்கும். இங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு தந்திரமாகவே இந்த தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தியிலும் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியிலயும் பதற்றம் அதிகரிச்சிருக்கு. இது உலகத்தோட மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒண்ணு. உலகத்துக்கான எண்ணெய் விநியோகத்துல பெரும்பகுதி இது வழியாதான் போகுது. இந்த வழித்தடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும், கடல் போக்குவரத்துக்கு எந்த தடையும் வரக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. இதற்காகவும் ஈரான் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்

ஆனா, அமெரிக்காவோட இந்த டீலை ஈரான் நிராகரிச்சிருச்சு. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்திருக்கு. “அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், ஈரானின் பழமையான நாகரிகத்திடமிருந்து மறக்க முடியாத ஒரு அடியை வாங்குவார்கள்”னு சொல்லியிருக்காங்க. சமீபத்திய மிரட்டல்களுக்குப் பிறகு, மறைமுக பேச்சுவார்த்தைகள் உட்பட பல ராஜதந்திர வழிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா பகுதியில் அதிகரித்திருக்கும் ஆபத்து

தாக்குதல்கள் தொடர்ந்தா, வளைகுடா பகுதியில் உள்ள எதிரி நாடுகளோட உள்கட்டமைப்புகளை தாக்குவோம்னு ஈரான் சூசகமா சொல்லியிருக்கு. சமீபத்தில் ஒரு கப்பல் மீதும், சவுதி அரேபியாவில் உள்ள சில தொழிற்சாலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றிற்கு அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்து என்ன நடக்கலாம்?

நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா, ஈரான் சீக்கிரமா ஒரு ஒப்பந்தத்துக்கு வரணும்னு அழுத்தம் கொடுக்கத்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துது. ஆனா, தாக்குதல் நிக்கிற வரைக்கும் பேச்சுவார்த்தைக்கே இடமில்லைனு ஈரான் கறாரா சொல்லிருச்சு. இனிவரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்குமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.