இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம்,  புறப்பட்ட 13-வது நிமிடத்தில்  விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

இதையடுத்து மாயமான ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது.  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை அதிகாரிகள் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் மிதப்பதாகவும், ஒரு சில பயணிகளின் உடல்களும் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.