இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமாக கருதும் வகையில் புதிய சட்டமசோதா  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்ததை எதிர்த்து  அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தோனேசியாவில் குற்றங்களை தடுக்கும் வகையில் அந்நாட்டு சட்டங்களை  கடுமையாக்கும் முயற்ச்சியில் அரசு இறங்கியுள்ளது. அதன்படி இந்தோனேசியாவில் திருமணத்துக்கு முன்பு ஆணோ, பெண்ணோ,  உடலுறவு  வைத்துக் கொள்ளவதை தடுக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டமசோதா ஒன்றைக்க கொண்டு வந்து அதை சட்டமாக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டது. அதில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொண்டால் ஒராண்டு சிறை தண்டனையும், திருமணத்திற்குப் பின்னர் வேறொருவருடன் உறவு வைத்துக்கொண்டால், அதை சட்டப்படி குற்றமாக கருதி  ஆறுமாதம் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடப்பதாக இருந்தது. இதனை எதிர்த்து  மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அந்தாட்டு நாடாளுமன்ற வளாகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பகுதிகளுக்கும் பதற்றம் தோற்றிக்கொண்டது. உடனே போராட்டக்ககாரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தை களைத்தனர், ஆனால் களைந்து செல்ல மறுத்து போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த அரசு, மசோதா தற்போதைக்கு சட்டமாக்கப்படாது என்று  அறிவித்தது,  போராட்டம் தற்காலிகமாக வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. ஊழல் ஆணையம் அமைக்க வேண்டும் என்று  மக்கள் கோரிவரும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்கில் அரசு இந்த புதிய மசோதாவை கொண்டு வந்து மக்களிடம்  திணிக்க முயற்ச்சிக்கிறது என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். அப்போது போரட்டத்தில் ஈடுபட்டிருந்த சில பெண்கள் என்னுடைய அந்தரங்க உறுப்பு அரசுக்கு சொந்தமானது அல்ல என்று எழதிய பதாகைகளை கையில் ஏந்தி எதிர்ப்பை வெளிபடுத்தினர்.