திடீரென உருவாகி ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி... பலி எண்ணிக்கை 168-ஆக உயர்வு!!
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் உயிரிழப்பு 168-ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் உயிரிழப்பு 168-ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இணைக்கும் பகுதிகளாக உள்ள சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென சுனாமி தாக்கியது. இங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளதை அடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்த சுனாமி ஏற்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி தாக்கியதில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை இடிந்து தரைமட்டமாகின. இந்த சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பெண்டக்லங்க், செரங், தெற்கு லம்புங் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 168-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 745 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.