இந்தோனேசியாவில் 60 பயணிகளுடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் 60 பயணிகளுடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 60 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போயிங் 737 ரக விமானம், 11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும், அதில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உட்பட 56 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் காணாமல் போன இடத்தில் இருந்து சில பாகங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 9, 2021, 5:43 PM IST