Asianet News TamilAsianet News Tamil

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி...உயிரிழந்தோர் எண்ணிக்கை 347-ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 347-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7-ஆக பதிவாகியிருந்தது.

Indonesia earthquake death toll: 347 dead

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 347-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7-ஆக பதிவாகியிருந்தது. Indonesia earthquake death toll: 347 dead

இதில் அங்குள்ள லாம் போக் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாம்போக்கில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நிலநடுக்கத்தில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். 1447 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

Indonesia earthquake death toll: 347 dead

1 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இன்னும் பல்வேறு  பகுதிகளில் இடிபாடுகளை அகற்றவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் லம்போக் தீவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios