இந்தோனேசியாவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7-ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 17,000 அதிகமான தீவுகளை கொண்டது இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் கம் ஏற்படுவது வழக்கம். 

இந்நிலையில் அந்நாட்டின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையான தாக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது.

 

இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு 91 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.