Russia Ukraine War: மனித கேடயங்களா இந்திய மாணவர்கள்..? பலிவாங்குகிறதா உக்ரைன் அரசு..?
Russia Ukraine War: உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக ரயில்களில் ஏற இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக ரயில்களில் ஏற இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நேட்டோ படையில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா 8வது நாளாக கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. பல்வேறு உலகநாடுகள் இந்த போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஷ்யா எதற்கும் அஞ்சாமல் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா நேற்று முதல் கார்கெவ், கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் கார்கெவ் நகரை ரஷ்யா உக்ரமாக தாக்கி வருகிறது. அங்கு நடந்து வரும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் உயிரிழந்த நிலையில், உடனடியாக இந்தியர்கள் அங்கிருந்து பேருந்து, இரயில் வசதி இல்லை என்றாலும் எந்தெந்த வழிகளில் வெளியேற வேண்டும் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இந்த சூழலில், எல்லையோர நகரங்களுக்கு செல்ல ரயில்களை பயன்படுத்த விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசாரும், ராணுவத்தினரும் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இந்தியத் தூதரகம் கவலை தெரிவித்தை அடுத்து, உக்ரைனில் இன, நிறப் பாகுபாடு காட்டப்படுவதில்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், இந்த விளக்கம் வெளியான சில நிமிடங்களுக்காகவே, இந்திய மாணவர்களை ரயிலில் ஏற அனுமதிக்க மறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கார்கிவிலிருந்து வெளியேற ரயில் நிலையங்களுக்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் ஏற்றாமல் அங்குள்ள போலீசார் வெளியேற்றுவதை காண முடிகிறது. அதேபோல, ரயிலில் தங்களையும் ஏற்றி கொள்ளுமாறு இந்திய மாணவர்கள் உக்ரைன் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்பு படை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்தியர்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ள நிலையில், உக்ரைன் அரசு, இந்திய மாணவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.