Russia - Ukaraine Crisis: விசா தேவையில்லை... போலாந்திற்குள் நுழைய இந்தியர்களுக்கு அனுமதி!!

உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்து வர அனுமதி என போலந்து தூதர் ஆடம் புரக்கோவ்ஸிகி தெரிவித்துள்ளார். 

indian students allowed to come poland without visa

உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்து வர அனுமதி என போலந்து தூதர் ஆடம் புரக்கோவ்ஸிகி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதற்குப் பதிலடியாக சம்பந்தப்பட்ட நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு தடைகளை அறிவித்து வருவதுடன் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைனை நான்கு திசைகளில் இருந்தும் தாக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது ஏவுகணைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் கிடங்குகள், எரிவாயுக் குழாய்களை தகர்க்கும் ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகளையும் பதம் பார்த்து வருகின்றன. இது மிருகத்தனமான செயல் என்று குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ரஷ்யா உக்ரைனில் நடத்தும் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

indian students allowed to come poland without visa

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்து வர அனுமதி என போலந்து தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்து இன்று 4வது நாட்களாக  ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. இன்று பெலாரஸில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையை பெலாரஸில் இல்லை என்றும்  உக்ரைன் மீது படையெடுக்க பெலாரஸ் இடம் கொடுத்ததால் அங்கு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என கூறினார்.

 

மேலும், போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட் என இந்த நகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார். பெலாரஸின் ஹோமல் நகரில் ரஷ்யாவின் குழு தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது உக்ரைனில் இதுவரை 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 150,000க்கும் அதிகமானோர் போலந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் விசா இன்றி போலந்து வர அனுமதி என போலந்து தூதர் ஆடம் புரக்கோவ்ஸிகி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios