Asianet News TamilAsianet News Tamil

தலையில் கத்திக்குத்து.. அமெரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய மாணவர்.. 11 நாள் போராட்டம் - இறுதியில் நேர்ந்த சோகம்!

Indian Student In America : கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில், கத்தியால் குத்தப்பட்ட 24 வயது இந்திய மாணவர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Indian Student Varun raj pucha Died in american hospital after getting attacked in gym ans
Author
First Published Nov 9, 2023, 4:10 PM IST | Last Updated Nov 9, 2023, 4:10 PM IST

வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கும் 24 வயது மாணவரான வருண் ராஜ் புச்சா, ஜோர்டான் ஆண்ட்ரேட்  என்ற 24 வயது நபரால் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி தலையில் குத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சுமார் 11 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இப்பொது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. 

மாணவர் வருண் ராஜ் புச்சா நேற்று புதன்கிழமை உயிரிழந்தார், அவர் தாக்கப்பட்ட அன்றே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பிழைக்க 5 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. "வருண் ராஜ் பூச்சாவின் மறைவை நாங்கள் கனத்த இதயங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வளாக சமூகம் தனது சொந்தம் ஒன்றை இழந்துவிட்டது, எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் வருணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கிறோம்" என்று வால்பரைசோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பகவத் கீதை ஆபாசமானது, அருவருப்பானது; யூதர்கள் படுகொலைக்குக் ஆதரவானது: எழுத்தாளர் ஸ்லாவோஜ் ஜிசெக்

குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி மற்றும் பிற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின்படி, வருண் தன்னை "கொலை செய்யப் போகிறார்" என்று ஆண்ட்ரேட் காவல்துறையிடம் கூறியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன்பு வருணும் தானும் பேசியதில்லை என்றும், ஆனால் வருண் "அச்சுறுத்துவதாக" யாரோ தன்னிடம் கூறியதாக ஆண்ட்ரேட் போலீசாரிடம் கூறினார்.

"அதிகாரிகள் பிளானட் ஃபிட்னஸ் ஊழியர்களுடனும் பேசினர் என்றும், அவர்கள் (குத்தப்பட்ட நபர்) வழக்கமான உடற்பயிற்சிக் கூடத்தில் இருப்பவர் என்றும், பொதுவாக அவர் மிகவும் அமைதியாக இருப்பவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நவம்பர் 16-ம் தேதி பல்கலைக்கழ வளாகத்தில் வருணின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும். "எங்கள் பல்கலைக்கழகம் வருண் ராஜ் புச்சாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளனர், அவர்கள் மீண்டு வர நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்," என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சூப்பர் மார்கெட்டுகள்.. மெல்ல மெல்ல குறையும் சீன பொருட்கள் - அதிக வரவேற்ப்பை பெரும் Made in India!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண், கணினி அறிவியலில் எம்எஸ் படித்து வந்தார். அவர் ஆகஸ்ட் 2022ல் அமெரிக்காவில் தனது படிப்பைத் தொடங்கினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios