அரபிக்கடலில் விக்ரமாதித்யாவை நிறுத்தி அரண்அமைத்த இந்தியா...!! கலக்கத்தில் சீனா பாகிஸ்தான்...!!
இந்நிலையில் இந்தியா சார்பில் அரபிக்கடலில் ஆயுதம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் நடவடிக்கைக்கு எதிராக அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலை நிறுத்த இந்திய கப்பற்படை தீர்மானித்துள்ளது. இந்த தகவல் பாகிஸ்தான் சீனாவுக்கு கலக்கத்தை எற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை அடுத்து பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு சதிகளில் ஈடுபட்டுவருகிறது , எதற்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் சீனாவும் பாகிஸ்தானுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது .
அடிக்கடி சீனா , இந்திய வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் இந்திய கப்பற்படையை வேவு பார்த்து வருகிறது . பல நேரங்களில் இது கண்டுபிடிக்கப்பட்டு சீனா போர்க்கப்பல்களை இந்தியா வெளியேற்றும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் சீன கப்பல் கடற்படையினர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் , இரு நாட்டு கப்பல் படைகளும் வடக்கு அரபிக்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . இந்நிலையில் இந்தியா சார்பில் அரபிக்கடலில் ஆயுதம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இந்த கப்பல் இருக்கும் எனவும் கருதப்படுகிறது . கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா சுமார் 284 மீட்டர் நீளமும் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டதுமாகும், இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் மிக்-29 கே ரக விமானங்களை நிறுத்தி வைக்க முடியும் என இந்திய கப்பற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் சீனா மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.