Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஒரு சோகம்.. கனரக வாகனம் நொறுங்கி விழுந்து விபத்து - சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி மரணம்!

எதிர்பாராத விதமாக அவர் இயக்கிய கனரக வாகனத்தின் ஒரு பகுதி முறிந்து அவர் மேல் விழுந்து அந்த தொழிலாளி இறந்துள்ளார்.

Indian Migrant Construction Worker Died in Singapore Changi Airport Extension Work
Author
First Published Jul 15, 2023, 3:55 PM IST

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சாங்கி விமானநிலையத்தின் ஒரு பகுதியில் தனது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு இந்திய புலம்பெயர் தொழிலாளி இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 13ம் தேதி, 30 மதிக்கத்தக்க அந்த கட்டுமானத் தொழிலாளி Skid Steer Loader இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் இயக்கிய கனரக வாகனத்தின் ஒரு பகுதி முறிந்து அவர் மேல் விழுந்து அந்த தொழிலாளி இறந்துள்ளார். சுமார் 1000 ஹெக்ட்டர் இடத்தில் சாங்கி விமானநிலையத்தின் கிழக்கு பகுதியில் பல காலமாக விரிவாக்க பணிகள் நடந்த வருகின்றது, இந்நிலையில் கிழக்கு பகுதியில் நடக்கும் 3வது பணியிட மரணமாக இது உள்ளது.

சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஈஸ்வரன் ஜாமீனில் விடுதலை! CPIB

சாங்கி விமானநிலையத்தின் டெர்மினல் 5 கட்டுமான பகுதியில் மாலை 4.45 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM - Ministry of Manpower) தெரிவித்துள்ளது. இயந்திர முறிவால் தாக்கப்பட்ட தொழிலாளி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விபத்து நடந்த பணியிடத்தில் அனைத்து இயந்திர செயல்பாடுகளையும் நிறுத்துமாறு அங்கு பணியாளர்களை நியமித்துள்ள நிறுவனத்திற்கு MOM உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த ஐந்து மாதத்திற்குள் சிங்கப்பூரில் 5 பணியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. பணியாளர்கள் உரிய பாதுகாப்புடன் தங்கள் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

துபாய் புர்ஜ் கலிபாவில் ஒளிரும் மூவர்ணக் கொடி! பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் வரவேற்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios