Singapore Airlines : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SQ) விமானத்தில் கேபின் குழு உறுப்பினரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 வயது இந்திய வாலிபருக்கு 3 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Singapore Airlines : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கேபின் குழு உறுப்பினரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 வயது இந்திய வாலிபருக்கு 3 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 14ஆம் தேதி ரஜத் என்ற 20 வயது வாலிபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பெர்த்திலிருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றுள்ளது. அப்போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியா பல்கலைக்கழக மாணவரான ரஜத் என்ற 20 வயது நிரம்பிய வாலிபர் விமானத்தில் கேபின் குழு பெண் உறுப்பினருக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

காலை 11:20 மணியளவில், விமானத்தின் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியை பணிப்பெண் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ரஜத் அந்த பணிப்பெண் பின்னால் இருந்து அணுகியபோது, தரையில் இருந்து ஒரு கழிப்பறை காகிதத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்போது ரஜத் அந்த பணிப்பெண் இடுப்பில் கை வைத்து கழிப்பறைக்குள் முழுவதுமாக தள்ளியிருக்கிறார். அதோடு தானும் பின்னாடியே நுழைந்து தவறு செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால், அதற்குள்ளாக மற்றொரு பணிப்பெண் அங்கு வந்து அந்த பணிப்பெண்ணை கழிப்பறையிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். எனினும், அந்த பணிப்பெண்ணுடன் ரஜத் பேச முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்கு அந்த மற்றொரூ பணிப்பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து விமானம் சங்கி விமான நிலையத்திற்கு வந்ததும் சிங்கப்பூர் அதிகாரிகள் ரஜத்தை கைது செய்தனர். மேலும், அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு 3 வார சிறைதண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.