2020 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி கப்பார்ட் என்ற இந்த பெண்ணும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்ற அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்  மற்றும் இவருக்கு எதிராக ட்ரம்ப் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப்பின் பதவி காலம் வரும் 2020 வரை உள்ளது.

இந்த நிலையில் வரும் அதிபர் தேர்தலின் மீண்டும் ட்ரம்ப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போன்று ஜனநாயக கட்சி சார்பாக யார் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இவர்கள் தவிர முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிரிஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்ட பலரும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த தேர்தலில் இந்திய வம்சாவழி எம்பி யான துளசி கப்பார்டின் பெயரும் இடம் பெற்று உள்ளது. இவர் 2012 ஆம் ஆண்டு, முதல் முறையாக எம்பி யாக தேர்வு செய்யப்பட்டார். 

ஜனநாயக கட்சி சார்பாக இவரை அதிபர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமை அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.