இந்திய உணவு வகைகளுக்கு, எமிரேட்ஸ் விமான நிறுவனம் தடை விதித்துள்ளது. இந்திய உணவு வகை அல்லாத சைவ-அசைவ உணவுகளைத் இந்தியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள், இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளை அளித்து வருகிறது. இந்த நிலையில், எமிரேட் விமான நிறுவனம் இந்திய உணவு வகைகளுக்கு தடை விதித்துள்ளது.

துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும எமிரேட் நிறுவனம், இந்திய உணவுகளுக்கு தடை விதித்தும், உணவு பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளது.

உணவு பட்டியலில் இருந்து இந்திய உணவு நீக்கம் செய்யப்பட்டது குறித்து எமிரேட் விமான நிறும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எங்கள் நிறுவனம் சுகாதார மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைக் கருத்தில் கொள்வது எங்கள் சேவை திறனை மேம்படுத்த உதவும். இந்திய உணவு வகை அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.