பாகிஸ்தானின் பிடியில் உள்ள இந்திய கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை சித்திரவதை செய்துவருவதாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவ்,  இவர் இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றிவர் ஆவார். இவரை கடந்த 2002 -ம் ஆண்டு பகிஸ்தான்  கைது செய்ததுடன், அவர் இந்திய உளவு அமைப்பான ’ரா’வில்  பணியாற்றி வருவதாகவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க அவரை இந்தியா அனுப்பிவைத்ததாகவும். உளவு பார்த்தபோது அவர் பிடிபட்டார் என பாகிஸ்தான்  கூறிவருகிறது.  ஆனால் அதை மறுத்த இந்தியா.  குல்பூஷண் இந்திய கப்பல் படையில் பணியாற்றிய கமெண்டர் அவர் கடந்த 2001 ஆம் ஆண்டே பணியில் இருந்து விலகி  இரானில் சொந்தமாக அவர் பிசினஸ் செய்துவந்தார் என தெரிவித்துள்ளது. 

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவிற்கு மரணதண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து  இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. அதில் குல்பூஷண் ஜாதவிற்கு எதிராக போலியான ஆவணங்களைத் தயாரித்து அவரை இந்திய உளவாளியாக  சித்தரிக்க பாகிஸ்தான் முயன்று வருவதாகவும்  இந்தியா குற்றம்சாட்டியது.  இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 2019 ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு  உத்தரவிட்டது. 

அத்துடன் சர்வதேச ஒப்பந்தங்களின் படி அவருக்கு கிடைக்க வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரித்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள குல்பூஷண் ஜாதவை இரண்டு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கான இந்திய தூரதர் கவுரவ் அலுவாலியா நேரில் சந்தித்து பேசினார். அப்போது குல்பூஷணுக்கு  தேவையான சட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவுப் குல்பூஷண் ஜாதவிடம் அவர் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பிற்குப் பின்னர் , குல்பூஷண் ஜாதவின் நிலைமை என்ன என்பது குறித்து இந்திய உள்துறைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷணை பாகிஸ்தான் அதிகாரிகள் கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தி அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளனர். அவரை தான் சந்தித்தபோது தான் எங்கு இருக்கிறோம் என்பதை கூட அவரால் உணரமுடியாத அளவிற்கு மோசமான மன உளைச்சலில் அவர் சிக்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்திய உளவாளி என ஒப்புக்கொள்ளுமாறு குல்பூஷணை பாகிஸ்தான் அதிகாரிகள் வலுக்கட்டாயப் படுத்திவருவதால் அவரு நிலைமை மோசமான உள்ளது என்றும் அந்த தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.