உறைபனி ஏரியில் தவறி விழுந்த இந்தியத் தம்பதி பரிதாபச் சாவு
அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் உள்ள உறைபனி ஏரியில் இந்தியாவைச் சேர்ந்த கணவனும் மனைவியும் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்புயல் வீசிவருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். க்யூபெக் முதல் டெக்சாஸ் வரை சுமார் 3,200 கி.மீ. பரப்பளவில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பனியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சீனாவை கொரோனா வைரஸ் உலுக்கி எடுக்க காரணம் என்ன? வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள்
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த நாராயணா, ஹரிதா மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் அங்குள்ள கோகுல் என்ற உறவினருடன் போனிக்ஸ் நகருக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது உங்குள்ள உட் கேனான் உறைபனி ஏரியைப் பார்வையிடச் சென்ற நாராயணா, ஹரிதா, கோகுல் மூவரும் எதிர்பாராத விதமாக ஏரிக்குள் தவறி விழுந்துள்ளனர்.
அந்தச் சமயத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைவாக மீட்புப் பணி மேற்கொண்டபோதும் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர். மகள்கள் இருவரும் பெற்றோருடன் ஏரியைப் பார்க்கச் செல்லாமல் கரையிலேயே இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
நாராயணாவும் ஹரிதாவும் திருமணத்துக்குப் பினகு இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் குறியேறி 14 ஆண்டுகளாக அங்கே வசித்துவந்தவர்கள் என்றும் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுடைய உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.