மேற்கு ஆப்பிரிக்காவில் பிணமாகக் கிடந்த இந்நிய தம்பதி; இந்தியத் தூதரகம் விசாரணை
தம்பதியரின் உடலை தாய்நாட்டிற்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விரிவான உதவிகளை வழங்குவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கோட் டி ஐவரியில் அபிட்ஜான் நகரில் இரண்டு இந்தியர்கள் இறந்து கிடந்தது குறித்து இந்திய தூதரகம் விசாரணை நடத்தி வருகிறது. மரணம் அடைந்த இருவரும் சந்தோஷ் கோயல் மற்றும் சஞ்சய் கோயல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த கடினமான நேரத்தில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து, தம்பதியரின் உடலை தாய்நாட்டிற்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விரிவான உதவிகளை வழங்குவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமர்நாத் கோஷ் யார்? அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?
"திருமதி. சந்தோஷ் கோயல் மற்றும் திரு. சஞ்சய் கோயல் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு சாத்தியமான ஒவ்வொரு ஆதரவையும் வழங்க தூதரகம் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இறந்தவர்களின் உடல்கள் விரைவாகவும் சுமூகமாகவும் இந்தியாவுக்கு அனுப்பப்படும்" என்று தூதரகம் கூறியுள்ளது.
இந்தியர்கள் இருவரின் மரணத்துக்கான காரணம் குறித்தும் முழுமையான விசாரணை நடப்பதை உறுதிசெய்ய அந்நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
"இந்த விவகாரத்தில் விரிவான விசாரணையை உறுதி செய்வதற்காக நாங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைச் சுற்றியுள்ள உண்மைகளைக் கண்டறிவதும், துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு பதில் அளிப்பதும் எங்கள் முன்னுரிமை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்! 30 ஆயிரம் கம்மியா கிடைக்குது!