உள்நாட்டு ஆயுதங்களை வைத்தே துவம்சம் செய்வோம்..!! பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க எச்சரிக்கை.!!
ஒருபுறம் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் , உள்நாட்டு தளவாட உற்பத்தி அபரிதமாக உள்ளது என்றார். அடுத்த போரை உள்நாட்டில் தயாராகும் ராணுவ தளவாடங்களைக் கொண்டே போராடி இந்தியா வெல்லும் என்றார். அடுத்த போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் அப்போது அவர் கூறுனார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களைக் கொண்டே இந்தியா தன் அடுத்த போரை நடத்தும் என்றும் அதில் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வெற்றிபெறும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ள நிலையில் ராணுவத் தளபதியின் பேச்சு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பல நாடுகளிலிருந்து உயர்தர ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்து வருவதுடன். உள்நாட்டிலேயே போர் தளாவாடங்களை இந்தியா உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற (டிஆர்டிஓ) இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இயக்குனர்களின் மாநாட்டில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில் ராணுவ பலத்தில் ஈடு இணையற்ற தேசமாக திகழ்கிறது என்றார்.
ஒருபுறம் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் , உள்நாட்டு தளவாட உற்பத்தி அபரிதமாக உள்ளது என்றார். அடுத்த போரை உள்நாட்டில் தயாராகும் ராணுவ தளவாடங்களைக் கொண்டே போராடி இந்தியா வெல்லும் என்றார். அடுத்த போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் அப்போது அவர் கூறுனார். நமது போர் யுக்திகள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அப்போது தெரிவித்தார். பின்னர் பேசிய இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவால், எதிரி நாடுகள் தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு நமது தாக்குதல் இருக்க வேண்டும்எ என்றும் அதற்கு என்ன தேவை என்பது குறித்து நமது பாதுகாப்பு துறை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும் எனக் கூறினார். கடுமையான பயிற்சியின் மூலமாக இந்தியாவில் பாதுகாப்பை மேலும் பாதுகாப்பானதாகவும் மாற்ற முடியும் என அப்போது அவர் தெரிவித்தார்.