பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பயங்கரவாதிகளின் மீது அதிரடி தாக்குதல்  நடத்தும் வகையில் "வார் கேம்ஸ்" பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர், தீவிரவாதிகளின் மீது  மீண்டும் ஒரு முறை சர்ஜிக்கல் ஸ்ரைக் நடத்த தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானிடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் இராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி அடிக்கடி இந்திய எல்லைக்கோட்டு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்து வருகின்றனர். அதே நேரத்தில் பாக் இராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிக்கள் இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டு வருவதாக உளவு பிரிவு எச்சரித்துள்ளது.  இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,  புல்வாமா தாக்குதலைப்போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து  இந்திய இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கிவரும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்திய எல்லையை யொட்டி,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.  இந் நிலையில், தீவிரவீதிகளை எச்சரிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் பாகிஸ்தானில் நுழைந்து  தீவிரவாத முகாம்களை அழிக்கவும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு முன்னோட்டமாக சர்ஜிக்கல் ஸ்ரைக் போலவே பயங்கரவாதிகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தும் ’வார் கேம்ஸ்’ என்ற போர் பயிற்ச்சியில் இந்தியாவின் முப்படைகளின் சிறப்பு பிரிவு ஈடுபட்டுவருகிறது. ஏற்கனவே குஜராத் கட்ச் மாவட்டம் நலியாவில் முப்படைகளில் சிறப்பு படையினர் "ஸ்மல்லிங் பீல்டு" எனும் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், இப் பயிற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த பயிற்ச்சியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எதிர்கொள்வது. தாக்குதலை முறியடிப்பது. மற்றும் அவர்களை தாக்கி அழிப்பதற்கான யுக்திகள் குறித்தும் செயல் விளக்க சிறப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முப்படைகளில் இருந்தும்  வேகமாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்து உருவாக்கப் பட்டுள்ள இந்த சிறப்பு படை அவரச காலத்தில் பாதுகாப்பு வளையங்களை தாண்டி ஊடுறுவி எதிரிநாட்டு படைகள் மீது தாக்கும் நடத்தும்  திறன் கொண்டவை என்பது கூடுதல் தகவல்.