டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகியோரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் பிரதான கட்சிகளாக ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் உள்ளன. தற்போதய அதிபர் ஜோ பைடன் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அடுத்த வருடம் இவரது பதவிக்காலம் முடியவுள்ளது.
எனவே 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் போட்டியிட முன்வந்துள்ளார். ஆனால், அதே கட்சியைச் சேர்ந்தவரும் ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் பிரதிநிதியும் ஆகிய நிக்கி ஹேலி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலியும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
Sri Lanka Elections: வாக்குச்சீட்டு அச்சடிக்க நிதி இல்லை! இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிறதா?

அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அந்த வகையில் குடியரசு கட்சியில் உறுப்பினர்கள் ஆதரவைப் பெறுவதில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நிக்கி ஹேலி இடையே போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். 37 வயதாகும் விவேக் ராமசாமி இந்தியாவின் கேரள மாநிலத்தில் வடக்கன்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர். விவேக் ராமசாமி ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் பிறந்தவர். இவரது தந்தை பொறியாளராகப் பணியாற்றியவர். தாயார் மனநல மருத்துவர்.
விவேக் ராமசாமி புகழ்பெற்ற ஹார்வர்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். விவேக் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்திவரும் இவரது சொத்துகள் இந்திய மதிப்பில் சுமார் 4,140 கோடி ரூபாய் ஆகும்.
விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவது பற்றிய அறிவிப்பை வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “நாம் நமது ‘பன்முகத்தன்மையை’ மிகவும் கொண்டாடினோம். ஆனால், நமக்குள் எல்லா வகையிலும் இருக்கும் ஒற்றுமையை மறந்துவிட்டோம். அது 250 ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்டிருந்தவர்களை ஒருங்கிணைத்தது. அது இன்னும் நம் ஆழத்தில் இருக்கிறது. அதை உயிர்ப்பிப்பதற்காக நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
