மீண்டும் காஷ்மீரில் கைவைக்க துணிந்த பாகிஸ்தான்..!! உடனே இடத்தை காலி செய்ய இந்தியா எச்சரிக்கை..!!

கில்கிட்- பால்டிஸ்தானில்  வாக்கெடுப்புகள் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்  கொடுத்துள்ள உத்தரவையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது . 

India warning to Pakistan regarding gilkit and paltistan voting

கில்கிட்- பால்டிஸ்தானில்  வாக்கெடுப்புகள் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்  கொடுத்துள்ள உத்தரவையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது .  கில்கிட் மற்றும் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்களை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதற்கு  இந்தியா தனது வலுவான எதிர்ப்பை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது ,  கில்கிட்- பால்டிஸ்தான் உள்ளிட்ட  பகுதிகள் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும் ,  எனவே இந்த பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்துவதோ அதில் தலையிடுவதோ சட்ட விரோதமானது எனவே  பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து  உடனே வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது . 

India warning to Pakistan regarding gilkit and paltistan voting

இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக  பிரச்சனை நீடித்து வருகிறது ,  இந்நிலையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை காஷ்மீர் லடாக் என 2 மாநிலங்களாகப் பிரித்ததுடன் அதை முழுவதுமாக  இந்தியா தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வந்தது ,  இந்தியாவின் இந்த நடவடிக்கையை  பொறுத்துக்கொள்ள முடியாத பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது,  சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக ஐநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக முயற்சித்து வருகிறது . ஆனால் அதன் திட்டம்  ஈடேறாததால்  தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாகாணங்களின் ஒருங்கிணைந்த பகுதியான கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தல் நடத்தலாம் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது ,  

India warning to Pakistan regarding gilkit and paltistan voting

இது இந்தியாவை மிகுந்த எரிச்சலடைய வைத்துள்ளது.  இந்நிலையில் அந்த உத்தரவு குறித்து தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ள இந்திய வெளியுறவுத்துறை ,  கில்கிட் மற்றும் பால்டிஸ்தான் முழுவதுமாக இந்தியாவுக்கு சொந்தமான  பகுதி என்பதால் , அதில் சட்டபூர்வமாக பாகிஸ்தானால் தலையிட முடியாது , எனவே இந்தியா பாகிஸ்தானை மிகக் கடுமையாக  எச்சரிக்கிறது , அதாவது  பாகிஸ்தான் சட்ட விரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான பங்கும் உரிமையும்  இல்லை , அந்த விவகாரத்தில் அவசர கோலத்தில் உத்தரவு கொடுத்துள்ள பாகிஸ்தான் நீதித்துறையை எச்சரிக்கிறோம் ,   இந்திய பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் பொருள் மாற்றங்களை கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம் . 

India warning to Pakistan regarding gilkit and paltistan voting

இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதை கைவிட்டு பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ்  வைத்துள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் ,  கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர்  அக்கிரமிப்பு செய்து வருவதும் , அது செய்து வரும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை மறைக்கவும் அல்லது அங்குள்ள மக்களின் மனித உரிமை மீறல் சுரண்டல் மற்றும் சுதந்திரத்தை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என இந்தியா எச்சரித்துள்ளது . 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios