சீனாவை வீறு கொண்டு எச்சரித்த இந்திய திருநாடு..!! எல்லைமீறினால் பதிலடி நிச்சயம்..!!
எல்லைக்கோடு இந்திய ராணுவத்தால் மிகத்துல்லியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இந்தியாவின் வழக்கமான ரோந்து நடைமுறைகளைக் கூட சீர்குலைக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது,
இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவின் சாதாரன ரோந்துப் பணிகளைக்கூட சீனா தடுத்துவருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் நாட்டின் எல்லையை பாதுகாப்பது அதன் கடமை எனவும் , அதில் யாரும் குறுக்கிட முடியாது எனவும் சீனாவுக்கு திட்டவட்டமாக எச்சரித்துள்ளது . சமீபத்தில் இந்திய-சீனா ராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இருநாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது . அதாவது லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ என்ற ஏரிப் பகுதியில் சமீபத்தில் இருநாட்டு படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த ஏரியின் வடக்கு கரை பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது . அதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வரும்நிலையில் கடந்த புதன்கிழமை ( மே- 5 ஆம் தேதி ) அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .
பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலையிட்டு நடத்திய பேச்சு வார்த்தையில் அங்கு பதற்றம் தணிந்தது . இதேபோல் மற்றொரு பிரச்சனையில் மே-9 அன்று சிக்கிம் எல்லையில் உள்ள நாகு லா பாஸ் அருகே கிட்டத்தட்ட 150 இந்திய -சீன இராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர் , இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் காயமடைந்தனர் இது இந்திய சீன இடையே அசாதாரன சூழலை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை "இந்திய -சீன எல்லையான அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி சில பாதுகாப்பு வசதிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியதாக அதாவது குடில்களை அமைத்ததாகவும் , கடந்த மே மாதம் தொடக்கத்திலிருந்து இந்திய ராணுவம் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி சீனா அப்பகுதயில் தன் ராணுவத்தை குவித்து வருகிறது . இந்தியாவும் பதிலுக்கும் ராணுவத்தை குவித்து சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவை எச்சரித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் சாதாரண ரோந்து பணிகளுக்குக் கூட சீனா இடையூறு ஏற்படுத்தி வருகிறது ஆனால் எல்லையை பாதுகாப்பது இந்தியாவின் தலையாக கடமை. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ளது , சீனா கூறுவதுபோல் இந்தியா மேற்கு அல்லது சிக்கிமில் கட்டுப்பாட்டு கோட்டை கடக்கவில்லை , இந்தோ-சீனா எல்லையில் உண்மையான எல்லை எது என்பதை இந்திய வீரர்கள் நன்கு அறிவர் , எல்லைக்கோடு இந்திய ராணுவத்தால் மிகத்துல்லியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இந்தியாவின் வழக்கமான ரோந்து நடைமுறைகளைக் கூட சீர்குலைக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, எப்போதும் எல்லைக்கோட்டை நிர்வகிப்பதில் இந்தியா பொறுப்பான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகிறது , அதே நேரத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.