பாகிஸ்தானுக்கு காலையில் பேரிடி.. மாலையில் மரண அடி அறிவிப்பு... தரமான சம்பவத்துக்கு தயாரான இந்தியா..!
சிறப்பு அந்தது ரத்து செய்யப்பட்ட நிலையில் தொகுதி மறுவரையறைக்காக சிறப்பு குழு அமைக்கிறது.
ஜம்மு - காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் ஆக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமை நீக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புகளும், ஆதரவும் எழுந்து வரும் நிலையில் அவற்றுக்கெல்லாம் கவலைப்படாமல் அடுத்த அதிரடியில் இறங்கி இருக்கிறது மத்திய அரசு. பாகிஸ்தான் - இந்திய எல்லைப்பகுதியில் நிலவி வரும் பிரச்னை காரணமாகவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது மத்திய அரசு.
சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைகளை இனி குறைத்துக் கொள்ளவும், கூட்டிக் கொள்ளவும் முடியும். அந்த அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறைக்கான பணிகளை விரைவில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறப்பு அந்தது ரத்து செய்யப்பட்ட நிலையில் தொகுதி மறுவரையறைக்காக சிறப்பு குழு அமைக்கிறது. இது பாகிஸ்தானை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.