இந்த ஆண்டு கடைசியிலே இந்தியாவுக்கு இருக்குது கச்சேரி... பாகிஸ்தான் அமைச்சர் தெனாவட்டு பேச்சு..!
அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யம் 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பங்கேற்று பேசினார். அப்போது, காஷ்மீருக்கான இறுதி இந்தியா - பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கலாம். காஷ்மீருக்கான இறுதி சுதந்திரம் போராட்டம் வந்துள்ளது. இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்சனை தீர வேண்டும் என ஐ.நா. விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இந்த முறை போரில் இந்தியா நிச்சயமாக தோல்வி அடையும். இந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். இந்த விவகாரத்தினால், இஸ்லாமிய நாடுகள் மவுனம் காப்பது ஏன்? இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இன்னும் நம்புபவர்கள் முட்டாள்கள். நமக்கு உற்ற நண்பனாக சீனா உள்ளது என ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார்.