Asianet News TamilAsianet News Tamil

அபுதாபியில் மோடி திறந்து வைத்த கோயிலுக்காக வங்கி வேலையைக் கைவிட்ட விஷால் படேல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஸ்வாமிநாராயண் கோயில் அபுதாபியில் புதிதாகத் திறக்கப்பட்டது. இந்தக் கோயிலில் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காக அவர் அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டிருக்கிறார். 

India origin investment banker quits job to serve at BAPS temple in Abu Dhabi sgb
Author
First Published Feb 27, 2024, 3:37 PM IST

2000 களின் முற்பகுதியில் லண்டனில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயிலில் தன்னார்வத் தொண்டு செய்துகொண்டிருந்த விஷால் படேல், வங்கித் துறையில் வேலை கிடைத்து அபுதாபி சென்றார். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஸ்வாமிநாராயண் கோவிலில் பணிபுரியத் தொடங்கியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஸ்வாமிநாராயண் கோயில் அபுதாபியில் புதிதாகத் திறக்கப்பட்டது. இந்தக் கோயிலில் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காக அவர் அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டிருக்கிறார். 27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த கோவில் அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவில் ஆகும். இதனை பிப்ரவரி 14 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

43 வயதான விஷால் படேல், இங்கிலாந்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்தார். அதில் இருந்து, கோவில் கட்டுவது முதல், திறப்பு விழா வரை விருந்தினர்களுக்கு சேவை செய்து வருகிறார். இந்தக் கோயிலைக் கட்டியுள்ள BAPS அமைப்புடன் தீவிரமாக கோயில் சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவர் இப்போது கோவிலின் தலைமை தொடர்பு அதிகாரி தகவல் தொடர்பு எனப் பல பொறுப்புகளை வகிக்கிறார்.

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் Gulf Ticket! தமிழர் உள்பட 667 பேருக்கு அடித்த ஜாக்பாட்!

குஜராத்தைச் சேர்ந்த விஷால் படேல், லண்டனில் வளர்ந்தவர். 2016 இல் அமீரகத்துக்குச் சென்று துபாய் சர்வதேச நிதி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். அதற்கு முன், அவர் முதலீட்டு வங்கிகளில் பணியாற்றினார்.

India origin investment banker quits job to serve at BAPS temple in Abu Dhabi sgb

“2016 முதல், நானும் எனது குடும்பத்தினரும் அமீரகத்தில் வசித்து வருகிறோம். அமீரகத்தில், இந்தக் கோயிலுக்காகப் பணியாற்றுவதன் மூலம் சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும், அதிக நன்மைக்கு பங்களிக்கவும் முடியும். இந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை” என்று படேல் கூறியுள்ளார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே லண்டனில் உள்ள கோயிலிலுடன் ஆழமான தொடர்பு கொண்டிருந்த படேல், "என்னைப் போன்ற பலர் கோயிலுக்காக சேவை செய்வதற்காக தங்கள் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வருவதற்குத் தயாராக உள்ளனர்" என்று சொல்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு, விஷால் படேல் வேலை தேடுவதில் சிரமப்பட்டார். அப்போது, லண்டனில் உள்ள BAPS மந்திரில் தொண்டு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

"ஸ்வாமிநாராயண் கோயில் எனக்கும் என்னைப் போன்ற எண்ணற்ற பலருக்கும் வாழ்க்கையில் வலுவான அடித்தளத்தை அளித்தது. இந்த அபுதாபி கோயில் சந்தேகத்திற்கு இடமின்றி இங்குள்ள சமூகத்திற்கும் அதேபோன்ற ஆதரவை வழங்கும்" என்று படேல் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஒன்றுக்கொன்று சவால் விடும் சூப்பர் பவர்... செம ஸ்பீடு... ரூ.2.5 லட்சத்திற்குள் கிடைக்கும் பெஸ்டு பைக் எது?

Follow Us:
Download App:
  • android
  • ios