Asianet News TamilAsianet News Tamil

இந்தியா எங்களுக்கு முக்கியம்... தலிபான் இயக்க மூத்த தலைவர் ஓபன் டாக்..!

பாகிஸ்தான் வழியாக இந்தியா - ஆப்கன் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம்

India is important to us ... Taliban senior leader Open Talk
Author
Afghanistan, First Published Aug 30, 2021, 11:55 AM IST

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக, தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.India is important to us ... Taliban senior leader Open Talk

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அடுத்தடுத்து வானத்தில் பறக்கும் ராக்கெட்டுகள், டிரோன் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தலிபான் தலைவர்கள் அண்டைநாடுகளுடனான அரசியக், பொருளாதார உறவுகளை பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவுடனான உறவு குறித்து ஷேர் முகமது அப்பாஸ் கூறுகையில், ‘’தெற்காசியாவில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அந்நாட்டுடன் ஆப்கனுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தலிபான்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடர்ந்து பேண விரும்புகிறோம்.India is important to us ... Taliban senior leader Open Talk

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நிர்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வழியாக இந்தியா - ஆப்கன் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம்’’என அவர் தெரிவித்துள்ளார். ஆப்கனில் சுமார் 500 திட்டங்களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலர்களை அதாவது ரூ.22,000 கோடியை இந்தியா முதலீடு செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios