india in worlds lazies list

உலகிலேயே சோம்பேறிகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியா 39-வது இடத்தில் உள்ளது எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலக நாடுகளில் உள்ள மனிதர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை அடிகள் நடக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தியது. இதற்காக 46 நாடுகளைச் சேர்ந்த 70 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தியது. இது குறித்து ‘நேச்சர்’ என்ற நாளேட்டில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அதில், உலகிலேயே நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக சீனர்கள், ஹாங்காங்கைசேர்ந்தவர்கள் தான் 6,880 அடிகள் நடக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமாக இந்தோனேசியா நாட்டு மக்கள் நாள் ஒன்றுக்கு 3,513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள்.

உலகில் சராசரியாக ஒரு மனிதர் நாள் ஒன்றுக்கு 4,961 அடிகள் நடக்கிறார். இதில் அமெரிக்கர்கள் 4,774 அடிகள் நடக்கிறார்கள்.

ஆனால், இந்தியர்களைப் பொருத்தவரை சராசரிக்கும் குறைவாக 4,257 அடிதான் நடக்கிறார்கள். இதில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு 4, 606 அடிகளும், பெண்கள் மிகக்குறைவாக 3,684 அடிகளுமே நடக்கிறார்கள். இதன்மூலம் அதிகமாக நடப்பவர்களும், உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 67 சதவீதம் வேகமாக உடல்பருமன் அடைகிறார்கள்.

இதில் சீனா, ஹாங்காங், உக்ரைன், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 ஆயிரம் அடிகள் நடக்கிறார்கள். மிகக்குறைவாக மலேசியா, சவுதி அரேபியா, இந்தோனேசியா மக்கள் நடக்கிறார்கள். குறைந்த தொலைவுக்கு கூட காரை பயன்படுத்துகிறார்கள் என ஆய்வு ெதரிவிக்கிறது