அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் விதித்துள்ள வரிகள் குறித்து வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. குறிப்பாக, இந்தியா அமெரிக்க மதுபானங்களுக்கு 150% வரி விதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. நியாயமான வர்த்தகத்தை டிரம்ப் ஆதரிப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வெள்ளை மாளிகை செவ்வாயன்று அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் விதித்துள்ள வரிகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பாக, இந்தியா அமெரிக்க மதுபானங்களுக்கு 150 சதவீதமும் விவசாயப் பொருட்களுக்கு 100 சதவீதமும் வரி விதிப்பதாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசியுள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தக நடைமுறைகளை ஆதரிப்பதாக வலியுறுத்தினார். கனடாவையும் விமர்சித்த அவர், பல ஆண்டுகளாக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் கனடா கொள்ளையடித்து வருவதாகச் சாடினார்.

"அமெரிக்க மக்கள் மீதும் இங்குள்ள நமது தொழிலாளர்கள் மீதும் கனடா சுமத்தி வரும் வரி விகிதங்கள் மிகவும் மோசமானவை" என்று லீவிட் கூறினார். கனடாவின் அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் கார்னியுடான டிரம்ப்பின் சந்திப்பு பற்றிய கேள்விகளுக்கும் பதிலு அளித்தார்.

இறக்குமதி வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதா? அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

பல்வேறு அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியாவும் ஜப்பானும் விதிக்கும் வரிகளையும் எடுத்துக்காட்டினார். தற்போதைய அதிபர் டிரம்ப் அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

"உண்மையில், கனடா மட்டுமல்ல, அதிக வரி விகிதங்களை விதிக்கும் பல நாடுகளின் பட்டியல் இங்கே என்னிடம் உள்ளது. நீங்கள் அமெரிக்க சீஸ் மற்றும் வெண்ணெய் மீது கனடா விதிக்கும் வரி கிட்டத்தட்ட 300 சதவீதம். இந்தியாவைப் பாருங்கள், அமெரிக்க மதுபானத்திற்கு 150 சதவீத வரி விதிக்கிறது. அது கென்டக்கி போர்பன் போன்ற மதுபானங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய உதவுவதாக இருக்கிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து பெறும் விவசாயப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கிறார்கள்" என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு எதிராக வரி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்பதை டிரம்ப் சுட்டிக்காட்டினார். சர்வதேச சமூகம் வரலாற்று ரீதியாக அமெரிக்காவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

நாற்காலியுடன் வெளியேறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! வைரலாகும் பிரியாவிடை காட்சி!