கொரோனா வைரஸ் மனித குலத்தின் எதிரி என உலக சுகாதார அமைப்பின் தலைவர்  டெட்ரோஸ் அதானாம் கேப்ரியல் கவலை தெரிவித்துள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி  உலகையே அச்சுறுத்தி வருகிறது .  இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு  இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  அதாவது இந்த வைரஸ் நான்கு கட்டங்களாக பாதிப்பை ஏற்படுத்தும்  என வரையறுக்கப்பட்டுள்ளது . 

இந்நிலையில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளது ,  இந்தியாவில் வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 170 ஆக உள்ளது .  இந்தியாவில் மத்திய மாநில அரசுகள்  தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கையின் மூலம் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது .  இந்நிலையில் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதானம் , இந்த கொரோனா வைரஸ் மனித குலத்தின் எதிரியாக உள்ளது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இது மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது .  சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும் பரிசோதித்தாக வேண்டும்  என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது . 

திருவிழாக்கள்,   விளையாட்டு நிகழ்ச்சிகள் ,  கச்சேரிகள் உட்பட மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . கொரோனா பாதிப்பு தொடங்கிய  60 நாட்களுக்குள் அதற்கான தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டது நம்ப முடியாத மிகப்பெரிய சாதனை என தெரிவித்துள்ளார் .  இதற்காகப் பாடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களை தாங்கள் பாராட்டுவதாக குறிப்பிட்ட அவர்,  கொரோனாவுக்கான இறுதிப்போட்டியில் உலகம் இறுதியில் வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .