பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள்  செயல்பட்டு வருவதை இந்திய  உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன .  அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டு அதை ஆதாரமாக வெளியிட்டுள்ளது.   பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு ஜெய்ஷ்-இ-முகமது ,  லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  இது சர்வதேச அளவில் உள்ள பல தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து பாகிஸ்தானில் முகாம்களை அமைத்து தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . 

 

இதை இந்தியா பலமுறை ஆதாரபூர்வமாக சர்வதேச அரங்கில் ஒலித்து வருகிறது  ஆனாலும் தொடர்ந்து பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில்  பாகிஸ்தானில் மூன்று மாகாணங்களில்  புதிதாக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  பயங்கரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்குள்ள முகாம்களில் பயிற்சி பெற்று வருகின்றனர் .  பாகிஸ்தானின் பஞ்சாப் ,  பலுசிஸ்தான்,  கைபர் பக்துன் ஹவா உள்ளிட்ட மாகாணங்களில் இந்திய செயற்கைக்கோள்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.   அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது பாகிஸ்தான் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அங்கு ஏராளமான முகாம்கள் கட்டப்பட்டுள்ளன ,  ஒவ்வொரு முகாம்களிலும் குறைந்தது 700 முதல் 800 பேர் வரை பயிற்சி பெற்று வருகின்றனர் ,  எனது இந்திய உளவுத்துறை அமைப்புகள் அனுமானித்துள்ளன.   அதாவது முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் 92 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் 12% பேர் சிறுவர்கள் என்பதையும் உளவுத்துறை தெரிவித்துள்ளது .