சீனா பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில்  சீன எல்லையில் போர் ஒத்திகை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு எதிரிநாடுகளின் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இந்தியாவிற்கெதிரான நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றனர். சர்வ தேச அளவில் இந்தியாவை தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி அதில் அந்நாடுகள் தோல்வியும் அடைந்துள்ளன, அமெரிக்காவும் அடிக்கடி ஆதரவாகவும் எதிராகவும் கருத்து கூறி வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக எத்தகைய சூழல் உருவானாலும் அதை எதிர்கொள்ளுவதற்கான பலம் மிக்க இராணுவத்தை கட்டமைப்பதில் இந்தியா கவன் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து அதிரக போர் விமானங்களை இறக்குமதி செய்து வருகிறது. 

இந்த நிலையில் முப்படைகளையும் நவீனப்படுத்தும் திட்டதிற்கு சுமார் 9.34 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே உலகின் தலை சிறந்த இராணுவ வலிமைகொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், இராணுவ பலம் மேலும் அதிகரித்துள்ளது. இந் நிலையில், ஆனால் பாகிஸ்தான் அடிக்கடி இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி வருகிறது. சினாவும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன், எல்லையில் அத்து மீறங்களில் ஈடுபட்டு வருகிறது. இது அத்தனைக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள இந்தியா சினா பாகிஸ்தானுக்க ஆபடம் புகட்ட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக  சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதிகளில் அடுத்த மாதம் போர் ஒத்திகை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

அதில் சுமார்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்றும், இதுவரை இல்லாத அளவிற்கு  விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தின் பக்தோரியா ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர்களை போர் முனைக்கு  அனுப்புவது , பீரங்கி மற்றும் தளவாடங்களை போர் முனைக்கு நகர்த்துவது  போன்று உண்மையான போரை எதிர்கொள்வது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவுடன் பகை நீருபூத்த நெருப்பாக இருந்தவரும் நிலையில் இந்தியா அவர்களின் எல்லைபகுதியில் ஒத்திகை நடத்துவது நிச்சயம் சீனாவை எரிச்சலடைய செய்பும் என்பதில் சந்தைம் இல்லை.