இந்தியாவெல்லாம் ஒரு நாடா..? சீனாவுடன் சேர்ந்து சீன் காட்டுகிறது... கொதிக்கும் டிரம்ப்..!
சீனாவை வளரும் நாடாக நாங்கள் கருதவில்லை. இந்தியாவை ஒரு வளரும் தேசமாக நாங்கள் கருதவில்லை.
இந்தியாவும், சீனாவும் சேர்ந்து எங்களைத் தனித்து விடப்பார்க்கிறது. அந்த நாடுகளை நாங்கள் வளர்வதாக பார்க்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ’’இந்தியா மற்றும் சீனாவை வளரும் நாடுகளாக கருத வேண்டாம் என வலியுறுத்தி உலக வர்த்தக அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளேன். உலக வர்த்தக அமைப்பு சீனாவை வளரும் தேசமாக கருதுகிறார்கள். நாங்கள் உலக வர்த்தக அமைப்பிற்கு ஒரு கடிதம் எழுதினோம். சீனாவை வளரும் நாடாக நாங்கள் கருதவில்லை. இந்தியாவை ஒரு வளரும் தேசமாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் கடந்த வாரம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்பேச்சுவார்த்தை அமரிக்க அதிபர் டிரம்பை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியா - சீனா நாடுகளை கடுமையாக சாடி வருகிறார் டிரம்ப்.