இந்தியாவை எந்த வல்லரசு நாடாலும் அசைக்க முடியாது.. திடீரென புகழ்ந்த இம்ரான்கான்.. பின்னணி என்ன?
இன்னொரு நாட்டிற்காக நமது மக்களை இறக்க அனுமதிக்க முடியாது. நம் வெளியுறவுக் கொள்கை இறையாண்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த எந்த வல்லரசு நாடும் முயற்சிக்காது. மக்களின் நலன்களைக் காரணம் காட்டி ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா எந்த பக்கமும் நிற்காத மறுத்தபோதும் எந்த வல்லரசு நாடும் இந்தியாவுக்கு எதிராக நிற்கவில்லை, நிற்கவும் முடியாது.
இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் நமக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால், இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்கு கொடுக்க அவர்களுக்கு துணிவில்லை.
இந்தியாவை அசைக்க முடியாது
இன்னொரு நாட்டிற்காக நமது மக்களை இறக்க அனுமதிக்க முடியாது. நம் வெளியுறவுக் கொள்கை இறையாண்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த எந்த வல்லரசு நாடும் முயற்சிக்காது. மக்களின் நலன்களைக் காரணம் காட்டி ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா எந்த பக்கமும் நிற்காத மறுத்தபோதும் எந்த வல்லரசு நாடும் இந்தியாவுக்கு எதிராக நிற்கவில்லை, நிற்கவும் முடியாது.
சுயமரியாதை
நாமும் இந்தியாவும் இணைந்து நமது சுதந்திரத்தைப் பெற்றோம். ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.