தடுப்பூசி ஆராய்ச்சியில் மின்னல் வேகத்தில் இந்தியா..!! 16 நகரங்களில் இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கியது..!!
கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாராகும் தடுப்பு மருந்தான, ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் இன்று தொடங்கியுள்ளன.
கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாராகும் தடுப்பு மருந்தான, ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் இன்று தொடங்கியுள்ளன.நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது. இதுவரை 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 2.40 கோடிப் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சத்து 3 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். 1.66 கோடி பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிகம் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 59 லட்சத்து 55 ஆயிரத்து 728 பேர் அந்நாட்டில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், இது கட்டுக் கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது.
பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்புச் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. பல்வேறு நாடுகள் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஆராய்ச்சிகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் நாட்டில் இரண்டு தடுப்பூசிகள் நம்பகரமாக உள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார் ஜைகோவ் -டி என்ற தடுப்பூசியை தயாரித்திருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் சீரம் கைகோர்த்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரித்து விநியோகிப்பதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டியூட் ஒப்பந்தம் போட்டுள்ளது.
கோவேக்சின் மற்றும் ஜைகோவ்டி தடுப்பூசிகளை முதல்கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்ட பரிசோதனை தொடங்கி இருக்கிறது, புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இந்த மருந்து இன்று மனிதர்களுக்கு பரிசோதிக்கப்படுகிறது. புனே தவிர பாட்னா, விசாகப்பட்டினம் ,சண்டிகர், கோகர்பூர் உள்ளிட்ட மேலும் 16 நகரங்களில் உள்ள மருத்துவ ஆய்வுக்கூடங்களிலும் மனிதர்களுக்கு இந்த மருந்து பரிசோதிக்கப்படுகிறது. துவக்கத்தில் ஐந்து தன்னார்வலர்களுக்கு ஆன்டிபாடி covid-19 பரிசோதனை நடத்தப்பட உள்ளது, நெகட்டிவ் என்று முடிவு வெளியாகும் நபர்களுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.