Russia Ukraine War: போரில் கொல்லப்பட்ட குழந்தைகள்.. காலியான 'ஸ்ட்ரோலருடன்’ அஞ்சலி..உருக்கும் புகைப்படங்கள்..

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவாக லிவ் நகரில் காலியான ஸ்ட்ரோலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்ட சம்பவம் மனதை உருக்கும் வகையில் உள்ளது.
 

In Ukraine, empty strollers are a symbol of children killed in war

நேட்டோ அமைப்பி சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அண்டை நாடான உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை உக்ரைனின் முக்கிய நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ்,மரியுபோல், சுமி, லிவ் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

In Ukraine, empty strollers are a symbol of children killed in war

இந்த நிலையில், நேற்று முதல் உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் லிவ் நகரத்தில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய படை ஈடுப்பட்டுள்ளது. இதற்கிடையில், லிவ் நகரத்தின் மத்தியில் இருக்கும் மைதானத்தில், போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போர் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில், பச்சிளம் குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் ‘ஸ்ட்ரோலர்’ வண்டிகளை காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு, போரில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதொடர்பாக புகைப்படங்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது.

In Ukraine, empty strollers are a symbol of children killed in war

மேலும் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் நினைவாக, 109 காலியான ஸ்ட்ரோலர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வண்டிகளில் அமர்ந்து செல்லும் உங்கள் சொந்தக் குழந்தைகளுடன் இறந்த குழந்தைகளை ஒப்பிட்டுப் பாருங்கள் என்றும்  உங்கள் குழந்தைகள் மீதான உணர்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ரஷ்யத் தாய்மார்களுக்கு தெரிவிப்பது போல நிகழ்ச்சியைல் கலந்துக்கொண்ட அதிகாரி பேசினார்.

In Ukraine, empty strollers are a symbol of children killed in war

கடந்த 20 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்ய தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று ரஷ்ய மக்களிடையே பேசிய ரஷ்யா அதிபர் புதின், இனப்படுகொலையை தடுப்பதற்காக இந்த தாக்குதல் அவசியமாகி உள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கிட்டதட்ட 2 லட்சம் பங்கேற்றதாக ரஷ்ய காவல் துறை தெரிவித்தது. ஆனால் மாணவர்களும் தொழிலாளர்களும் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டதாக சில சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

In Ukraine, empty strollers are a symbol of children killed in war

இதனிடையே அதிபர் புதின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது உரை திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. பின், பழைய காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிபர் புதின் பேச்சு திடீரென் நிறுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios