காஷ்மீர் விவகாரத்தில் கெஞ்சிக் கேட்ட பாகிஸ்தான்... அமெரிக்காவை ஒதுங்க வைத்து கெத்துக் காட்டிய இந்தியா..!

 அமெரிக்கா, இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் எனக் கூறி ஒதுங்கியது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

In the case of Kashmir  The United States of America

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது இந்தியாவின் முடிவு, முற்றிலும் அதன் உள்நாட்டு விவகாரம் என்று கருத்து தெரிவித்துள்ளது. In the case of Kashmir  The United States of America

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மத்திய அரசு. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்ற இந்தியாவின் அறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.In the case of Kashmir  The United States of America

அதேசமயம், இந்த நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேசமயம், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு அமெரிக்‍கா தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கெனவே பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது எங்கள் உள்நாட்டு விவகாரம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என இந்தியா தெரிவித்து விட்டது. In the case of Kashmir  The United States of America

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டு இருந்தார். இருப்பினும் அதற்கு பதிலளிக்காத அமெரிக்கா, இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் எனக் கூறி ஒதுங்கியது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios