இந்தியாவில் கண்ணாமூச்சி ஆடும் கொரோனா..!! பெண்களை குறிவைத்து தாக்கும் கொடூரம்..!!

குறிப்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன்கள் உள்ளன அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன, ஆனால்  இந்தியாவில்  ஆண்களை விட பெண்களே அதிகமாக இறக்கின்றனர்

in India females has been affect then male by corona

கொரோனா வைரஸ் உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில் புதிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. உலகெங்கிலும் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வைரசால் பாதிக்கப்படுகின்றனர், அதிக அளவில் ஆண்களே உயிரிழக்கவும் செய்கின்றனர். ஆனால் இது இந்தியாவில் தலைகீழாக மாறியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகம் பெண்களே உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் ழுழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் சாதி, மதம், மொழி, இனம் பாகுபாடின்றி ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த வைரஸ் தோற்றால் ஆண்களை விட பெண்களே அதிகம் உயிர் இழப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  குறிப்பாக இத்தாலி சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் அவர்களின் இறப்பு எண்ணிக்கை பெண்களைவிட அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று  ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

in India females has been affect then male by corona

இதேபோல் இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி ஆண்களுக்கு அதிக தொற்றுநோய்கள் இருந்தபோதிலும் பெண்கள் கொரோனா வைரசால் இறக்கும் ஆபத்து மிக அதிகம் என்று கூறியுள்ளனர். மே- 20 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் இறப்பு புள்ளி விவரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களில் 3.3 சதவீதம் பேர் இறந்துள்ளனர். அதே ஆண்களில் இறப்பு எண்ணிக்கை 2.9 சதவீதமாக உள்ளது.  இந்தியாவில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது,  பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரமாக இருந்தது. ஆனால் அந்த ஆராய்ச்சியில் முடிவதற்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. அதில்  3.01 சதவீதம் பெண்கள் உயிரிழந்தனர். இந்த காலகட்டத்தில் 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 3.2 சதவீதம் பெண்கள் உயிரிழந்தனர். அதே  40 முதல் 49 வயதுக்குட்பட்ட இறந்த ஆண்களின் எண்ணிக்கை 2.1 சதவீதமாக பதிவாகி உள்ளது. 

in India females has been affect then male by corona

இந்த ஆய்வுடன் தொடர்புடைய ஹார்வர்டு பல்கலைக்கழக மக்கள்தொகை சுகாதார பேராசிரியர்  எஸ்.பி சுப்ரமணியம் இது  குறித்து தெரிவிக்கையில் covid-19 இறப்பு விகிதத்தை பாலினத்தின் படி அளவிட 2 அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன என்று அவர் கூறினார், அது இறப்பு ஆபத்து மற்றும் இறப்பு சுமை. அதேநேரத்தில் ஜான் ஹாப்கின்ஸ் புளும்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் பேராசிரியர் குன்ஹிரோ மாட்சுஷிதா குறிப்பாக இதய நோய் மற்றும் உயர் பதற்றம் போன்ற காரணங்களால் ஆண்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பல நாடுகளில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக புகை பிடிக்கின்றனர்.  மேலும் சில ஆய்வுகள் ஆண்கள் பெண்களை விட குறைவாகவே கை கழுவுகின்றனர் என்பதை காட்டுகின்றன. பொதுவாக ஆண் நோயாளிகளுக்கு கோவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தொற்று நோயால் பெண்கள் இறக்கும் அபாயம் குறைகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  குறிப்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன்கள் உள்ளன அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன, ஆனால்  இந்தியாவில்  ஆண்களை விட பெண்களே அதிகமாக இறக்கின்றனர்.

in India females has been affect then male by corona

இது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது கோவிட்-19 ஜ இந்தியா அடையாளம் காணக்கூடிய வழிகளின் அடிப்படையில் ஆராய்ச்சி தரவுகளை நாம் சோதிக்க வேண்டும்,  உதாரணமாக பெண்கள் ஆண்கள் சோதிக்கப்படுவதற்கு இணையாக சோதிக்கபடுகிறார்களா.? சுகாதாரத்தில் சமவாய்ப்பு பெறுகிறார்களா.? என்பதை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  மேலும் இந்தியாவில் பெண்கள் ஆண்களைவிட அதிககாலம் வாழ்கின்றனர். நாட்டில் வயதான பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்,  எனவே பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவே காரணம் எனில் வயதானவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளது. மேலும் பெண்கள் மருத்துவரிடம் செல்வதற்கும் தாமதம் ஏற்படுவதையும், பெரும்பாலும் வீட்டிலேயே மருந்துகளை எடுத்துக் கொள்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மேலும் வீட்டில் பெண்களின் ஆரோக்கியத்தை புறக்கணிக்கும் அதிக காரணங்கள் உள்ளன,  கோவிட்- 19 சிகிச்சைக்காக பெண்கள் தாமதமாக மருத்துமனைக்கு வருகிறார்களா என பல்வேறு கேள்விகளை விஞ்ஞானிகள் முன்னெழுப்புகின்றனர். குறிப்பாக 1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சலில் ஆண்களைவிட இந்தியாவில் அதிகமாக பெண்களே இறந்தனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள  வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற காய்ச்சல் நிபுணர் பேராசிரியர் டி.ஜேக்கப் ஜெகன் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய பாலின தரவுகளை பகுத்தாராய வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios