அய்யோ 24 மணி நேரம் போதலையே அப்டின்னு புலம்புகிறவாரா நீங்கள் ? உங்களுக்கு இனி ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ராவா கிடைக்கப் போகுது!!
இனி வாரும் காலங்களில் நாள் ஒன்றிற்கான நேரம் 24மணி நேரத்தில் இருந்து 25மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பான இந்த உலகத்தில் உழைக்க 8 மணி நேரம், உறங்க 8 மணி நேரம், ஓய்வெடுக்க 8 மணி நேரம் என 24 மணி நேரம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் மனிதர்களுக்கு 24 அணி நேரம் என்பது போதவில்லை என்றே அறியப்படுகிறது.
அய்யோ இன்னும் நிறைய வேலை இருக்கே, டைம் பத்தலையை அப்டின்னு ஒவ்வொருவரும் நாள் தோறும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் - மோடிசன் பலகலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் ஒரு நாளிற்கான நேரம் அதிகரிப்பு குறித்து தெரிவித்துள்ளார். நிலவு பூமிக்கு அருகில் இருந்து வருடத்திற்கு 3.82 செ.மீ தூரம் விலகி சென்றேபடியே உள்ளது.
தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்றுள்ளது. 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒருநாள் என்பது 25மணி நேரங்களாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்..
அய்யய்யோ ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஆவதற்கு மனிதர்கள் இன்றும் 200 மில்லியன் ஆண்டுகள் காத்திருக்கணுமா ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.