தோஷ்கானா வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை... அதிரடி கைது !! பாகிஸ்தானில் பரபரப்பு

தோஷ்கானா வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Imran Khan sentenced to 3 years in jail after being found guilty in Toshakhana case

தோஷ்கானா வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளன என்றும் அதனால் அவரைக் குற்றவாளியாக அறிவிப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிறை தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபாரதத்தொகையைச் செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் காவல்துறை இம்ரான் கானை விரைவில் கைது செய்து சிறை அடைக்கவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அந்நாட்டுச் சட்டப்படி இம்ரான் கான் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

நீயா, நானா போட்டியில் எலான் மஸ்க், ஜுக்கர்பெர்க்; பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு செக் வைக்க ட்விட்டரில் புதிய வசதி!!

Imran Khan sentenced to 3 years in jail after being found guilty in Toshakhana case

ஆகஸ்ட் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் இதே வழக்கில்தான் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்களில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் பலவற்றை அரசின் தோஷ்கானா என்ற களஞ்சியத்தில் ஒப்படைக்காமல் தாமே வைத்துக்கொண்டதாக சிலவற்றை விற்பனை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஏற்கெனவே அந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை நடத்த முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நிலையில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இன்டர்நெட் இல்லாமலே மொபைலில் டிவி பார்க்க முடியுமா? புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios