சற்றுமுன், அமெரிக்காவிடம் வசமாக சிக்கிய இம்ரான்கான்..!! உண்மை தெரிந்தது... இனி பாகிஸ்தானின் கதை கந்தல்.!!
கடந்த காலங்களில் அவர்களுக்களை ஆதரித்திருக்கக் கூடாதோ என்று எண்ண தோன்றுகிறது என விரக்தியை வெளிபடுத்தியுள்ளார் இம்ரான். உள்நாட்டி தீவிரவாதிகளுக்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாகிஸ்தான் பறிகொடுத்து நிற்கிறது என்று கூறினார்.
தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதி அளித்து உதவியது உண்மைதான் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா சமீபத்தில் இம்ரான்கான் மீது குற்றம்சாட்டியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை நம்பும் அளவிற்கு உலகநாடுகள் பாகிஸ்தானை நம்ப மறுக்கின்றன. பாகிஸ்தான் மீது எல்லோருக்கும் இருந்துவரும் எதிர்மறை சிந்தனையே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பாகிஸ்தான் எல்லாவற்றிலும் தோல்வியடைந்த நாடு என்ற சிந்தனை மற்ற நாட்டினர்கள் மத்தியில் இருந்துவருகிறது. அதை பாகிஸ்தான் மக்களும் அரசும் இணைந்து போக்க வேண்டும். அது நமது தலையாய கடமைகளில் ஒன்று என்றார். இம்ரான்கான் பிரதமர் ஆனால் நாட்டை செழுமை மிக்கதாக மாற்றிவிடுவார் என்று பாக்கிஸ்தானியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கான வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேயில்லை . உள்நாட்டு தீவிரவாத அமைப்பான ஜமாத்- உத் - தவா உள்ளிட்ட அமைப்புகளை வளர்த்தெடுப்பதிலேயே அவர் குறியாக உள்ளார். இதுவரை 30 முதல் 40 பில்லியன் டாலர் அளவிற்கு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செலவு செய்துள்ளாரே தவிர. நாட்டை முன்னேற்ற பிரதமருக்கு வழி தெரியவில்லை எனவும் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதே குற்றச்சாட்டை ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா வைத்துள்ளது. அமைச்சரின் பேச்சை அடிப்படையாக வைத்து அமெரிக்காவும் பாகிஸ்தானை விமர்சித்துள்ளது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள இம்ரான்கான். உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்ச்சி அளித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் அதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் . 1980 களில் ஆப்பகனிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்ததை விரும்பாத அமெரிக்கா அப்போது ரஷ்யாவிற்கு எதிராக செயல்படுவதற்காக தனது உளவு அமைப்பான சிஐஏ வின் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிறச்சி அளித்தது என குறிப்பிட்டுள்ளார்.
தன்னால் வளர்ந்த தீவிரவாத அமைப்புகளை தற்போது அமெரிக்காவே வசைபாடுவது முரணாக உள்ளது எனவும் கூறியுள்ளார். தற்போது அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராகவே செயல்படுவதை பார்க்கும்போது . கடந்த காலங்களில் அவர்களுக்களை ஆதரித்திருக்கக் கூடாதோ என்று எண்ண தோன்றுகிறது என விரக்தியை வெளிபடுத்தியுள்ளார் இம்ரான். உள்நாட்டி தீவிரவாதிகளுக்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாகிஸ்தான் பறிகொடுத்து நிற்கிறது என்று கூறினார். தீவிரவாதிகளால் பாகிஸ்தான் சந்தித்துவரும் இத்தனை காயத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானை இந்தியா அமெரிக்கா பொன்ற நாடுகள் தீவிரவாத நாடு என விமர்சிப்பது வேதனையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.