Asianet News TamilAsianet News Tamil

திருமணத்தை மீறிய உறவு எந்தெந்த நாடுகளில் குற்றம், குற்றமில்லை!

திருமணத்தை மீறிய உறவு குற்றமல்ல, இதில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் ஐபிசி 497 பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று பரபரபரப்பு தீர்ப்பளி்த்தது.

illegal relationship countries
Author
Delhi, First Published Sep 28, 2018, 1:31 PM IST

திருமணத்தை மீறிய உறவு குற்றமல்ல, இதில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் ஐபிசி 497 பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று பரபரபரப்பு தீர்ப்பளி்த்தது. இதில் எந்தெந்த நாடுகளில் திருமணத்தை மீறிய உறவு குற்றம், குற்றமில்லை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

திருமணத்தை மீறி ஆன ஆண்-பெண் இடையேயான தகாத உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவுக்கு எதிராக ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். illegal relationship countries

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் திருமணத்தை மீறியதகாத உறவு குற்றம் அல்ல. மனைவிக்கு கணவர் எஜமானர் அல்ல. திருமணத்தை தாண்டி தகாத உறவில் ஈடுபடும் ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது. illegal relationship countries

பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை. மனைவி கணவனின் சொத்து கிடையாது. பாலியல் உரிமையையும் கட்டுப்படுத்த முடியாது ’என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்நிலையில், திருமணத்தை மீறிய உறவு எந்தெந்த நாடுகளில் குற்றம் மற்றும் எந்தெந்த நாடுகளில் குற்றமில்லை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

 illegal relationship countries

அதன்படி, திருமணத்தை மீறிய உறவ குற்றம் என்று, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, வங்கதேசம், ஈரான், மாலத்தீவு, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்காவின் சில மாநிலங்கள், அல்ஜீரியா, காங்கோ, எகிப்து, மொராக்கோ, நைஜிரியாவின் சில பகுதிகள் திருமணத்தை மீறிய உறவு குற்றமல்லை என்று அதை அங்கீகரித்துள்ள நாடுகளாக சீனா, ஜப்பான், பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து,டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, அயர்லாந்து, பர்படாஸ், பெர்முடா, ஜமைக்கா, டிரினிடாட் அன்ட் டுபாகோ, செய்செல்லஸ், தென்கொரியா, கவுதமாலா ஆகியவை உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios