சீனாக்காரனை இப்படியே விட்டு வைத்தால் உலகத்தின் கதை கந்தல்..!! கூண்டோடு தூக்க அமெரிக்கா போட்ட பிளான்.
இது நம் காலத்தின் மிகப் பெரிய சவால் நிறைந்த பணி. சீனா உலக மக்களின் நல வாழ்வுக்கும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது 1970 ஆம் ஆண்டுகளிலேயே கம்யூனிஸ்டு ஆட்சி எதை நோக்கிச் செல்கிறது என்பதை எங்கள் தலைவர்கள் அறிந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த உலகுக்கும் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும், உலகம் ஒன்றிணைந்து சீனாவை திருத்தாவிட்டால், அது ஒட்டுமொத்த உலகத்தையும் தலைகீழாக மாற்றிவிடும் எனவும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனாவை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும் அதற்காக ஒத்த சிந்தனை கொண்ட நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் செங்குவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ள நிலையில், மைக் பாம்பியோ சீனாவுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென்சீனக்கடல் விவகாரம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதன் ஓருபகுதியாக ஹூஸ்டன், மற்றும் டெக்ஸாஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டது. இதனை கண்டித்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் செங்குவில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நிக்சன் நூலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ பேசியதாவது:- சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பும் உலகிற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை திருந்துமாறு கட்டாயப்படுத்துவது அவசியம், இல்லையென்றால் சீன ஒட்டுமொத்த உலகத்தையும் தலைகீழாக மாற்றிவிடும். சில நாட்களுக்கு முன்பு இதே கருத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பு தெரிவித்தார். தற்போது இருநாடுகளும் ஒரு பனிப்போரை நோக்கி நகர்கின்றன. சீனாவுக்கு எதிராகவும், நாங்கள் அவர்களின் நட்பு நாடுகளை சமாளிப்பதற்கான வழிகளையும் தேடுகிறோம்.
இது நம் காலத்தின் மிகப் பெரிய சவால் நிறைந்த பணி. சீனா உலக மக்களின் நல வாழ்வுக்கும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது 1970 ஆம் ஆண்டுகளிலேயே கம்யூனிஸ்டு ஆட்சி எதை நோக்கிச் செல்கிறது என்பதை எங்கள் தலைவர்கள் அறிந்து கொண்டனர். சீனா தொடர்ந்து தனது ராணுவ சக்தியை அதிகரித்து வருகிறது, சீனாவில் மனித உரிமைகளுக்கு ஒருபோதும் இடமில்லை, வியாபாரத்தை அதிகரிக்கவும், லாபத்தை சம்பாதிக்கவுமே அவர்கள் புதுப்புது யுக்திகளை பின்பற்றி வருகின்றனர். சீனாவின் சதிக்கு எதிராக அமெரிக்கா தற்போது செயல்பட வேண்டும். அமெரிக்காவின் முழு பலம் என்ன என்று சீனா முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், ஒரு விஷயத்தை நம்புங்கள் ஆனால் முதலில் அதை சரி பார்த்து விட்டு நம்புங்கள் என்பார். ஒத்த சித்தாந்தம் மற்றும் ஜனநாயக சார்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில் கம்யூனிஸ ஆட்சியின் கீழ் நாம் இன்னும் சீனாவை மாற்றவில்லை என்றால், அது நம்மை மாற்றி விடும். சில நோட்டோ நாடுகள் சீனாவுக்கு எதிராக நிற்க தயங்குவதாகவும் பாம்பியோ ஒப்புக்கொண்டார்.