காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது இறுதி மூச்சுவரை போராடும் என்றும், அதற்காக எந்த முடிவுக்கும் செல்லவோம் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது. 

ஜம்முகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அனைத்திலும் படுதோல்வியை சந்தித்து வரும் நிலையில், உச்சகட்ட விரக்தியில் உள்ளது பாகிஸ்தான்.  உணர்ச்சியவத்தின் பிழம்பாக மாறியுள்ளது.  இப்போது எல்லைக்கோட்டிற்கு அருகே அமைதியற்ற சூழலை உருவாக்கும் நடவடக்கையிலும் அது இறங்கியுள்ளது. அந்தாட்டின் ஜனாதிபதி தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் வரை காஷ்மீர் விவகாரத்தில் கண்மூடித்தனமாக கருத்துக்களை பதிவிட்டு அந்நாட்டு மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு வருகின்றனர்  இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய இம்ரான்கான், 

உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் காஷ்மீரை மீட்க பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் செல்லத்தயாராக உள்ளது என எச்சரித்தார்.  இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இந்த பினக்கு,  போரை நோக்கி சென்றால் அது எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகநாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரையில் நாட்டு மக்களின் முழு ஒத்துழைப்புடன் பாகிஸ்தான் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கும் என்றும் ,தங்களின் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார் அவர் இப்படி கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி  இந்திய துருப்புகளின் மீது  பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.. 

அதற்கு  இந்திய இராணுவம் போஃபோர்ஸ் பீரங்கிகளுடன்  பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் BAT எனப்படும் எல்லை நடவடிக்கை படையைச் சேர்ந்த சுமார் 6 பேரை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. சிறப்பு சேவைக் குழு, கமாண்டோ படை, மற்றும் பேட் குழு வீரர்களை பாகிஸ்தான் தனது எல்லையில் அதிகமாக குவித்து வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் இராணுவத்திற்கு இணையாக பயங்கரவாத குழுக்களின் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பு பயங்கரவாதிகளுக்கு எல்லையில் பயிற்ச்சி வழங்கி வருகிறது. இந்நிலையில்  ராவலகோட்,கோட்லி ,முசாபராபாத் போன்ற இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரவிக்கின்றன.