சீனாவின் வுனான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தொற்று தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கி வருகிறது. சீனாவில் கொரோனா நோய் தற்போது கட்டுக்குள் வந்து அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கும் நிலையில் உலகின் மற்ற நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை கொரோனா வைரஸ் உண்டாகி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா என உலகின் 204 நாடுகளில் மெல்ல மெல்ல கால்பதித்த கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10,14,747 ஆக இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,166 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருப்பதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தளபதி விஜய் மகனா இது?... அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே... வைரல் போட்டோ...!

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆனால் சாதாரண நாட்களை போலவே மக்கள் நடமாடுவதை அங்காங்கே காண முடிகிறது. இப்படி எல்லாம் எதுவும் ஆக கூடாது அப்படின்னு தான் பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவு என்ற பெயரில் போட்டார் பாருங்க ஒரு போடு... வாண்டாட கூப்பிட்டாலும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாங்க. 

இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!

அப்படி என்ன உத்தரவுன்னு தானே கேட்குறீங்க... மற்ற நாடுகளில் எல்லாம் ஊரடங்கை விட்டு வெளியே வந்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து மட்டும் தான் கிடைக்கும். ஆனால் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் மக்களை காக்க வேண்டியது சமூக கடமை. அதனால் யாராவது வீட்டை விட்டு வெளியே வந்தால் சுட்டுத்தள்ளுங்கள் என ராணுவம் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். 

இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!

அதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்  கொள்ள வேண்டும். மீறி வெளியே வந்தால் நானே கொன்னு புதைச்சிடுவேன் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இனி யாரவது வீட்டை விட்டு வெளியே வருவாங்களா?...  நீங்களே சொல்லுங்க...!