அழகான பெண்கள் அதிகமாக இருந்தால் ரேப் கேஸ்களும் அதிகமாத்தான் இருக்கும்… ஜனாதிபதியின் அதிரடி பேச்சு !!
அழகான பெண்கள் அதிகமாக இருந்தால் பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே பேசியது உலகம் முழுவதும் பெண்கள் அமைப்புகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோட்ரிகோ அடிக்கடி மிக மோசமான பேச்சுக்களால் சர்ச்சையில் சிக்கி வருபவர். மட்டுமின்றி போதை மருந்து கும்பலை அடியோடு ஒழிக்கிறேன் என ஆயிரக் கணக்கான குடிமக்களின் மரணத்திற்கும் காரணமானார். போதை மருந்து கடத்தியவர்களை தானே அடித்துக் கொன்றதாக ஓபனாக பேசியவர் இவர்.
இந்நிலையில் பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டுடெர்டேவின் சொந்த ஊரான டேவோவில் நாட்டிலேயே அதிக பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, அழகான பெண்கள், அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என அவர் நகைச்சுவையாகக் கூறினார். ஆனால் இந்தக் கருத்து சர்வதேச அளவில் மகளிர் அமைப்புக்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டு சிறார்கள் மீது வன்புணர்வு குற்றங்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய அவர், உலக அழகிகளை விட்டுவிட்டு ஏன் சிறார்களை துன்புறுத்துகின்றார்கள் என அவர் பதில் அளித்திருந்தார்.
அண்மையில் சொந்த மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்ததை, நாடகமாடுகிறார் என கூறி ஜனாதிபதி ரோட்ரிகோ அச்சம்பவத்தை மூடிமறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.