14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்... அவசரநிலை பிரகடனம் செய்த ஐஸ்லாந்து அரசு
2023 அக்டோபர் முதல் ஐஸ்லாந்து தீபகற்பத்தில் சுமார் 24,000 நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த 14 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 800 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது. இந்தத் தொடர் நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முந்தைய அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிரின்டாவிக்கின் வடக்கே, சுந்த்ஞ்சுகாகிகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக சிவில் பாதுகாப்புக்கான அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று சிவில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நிலநடுக்கங்கள் இதுவரை ஏற்பட்டதைவிட பெரியதாக வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கக்கூடும்" என்றும் ஐஸ்லாந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில நாட்களில் எரிமலை வெடிப்பு நிகழலாம் என்றும் கணித்துள்ளது. இதனால், சுமார் 4,000 மக்கள் வசிக்கும் கிரின்டாவிக் கிராமத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீபாவளி கின்னஸ் சாதனை! 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தி!
தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு வலுவான பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் தெற்கு கடற்கரையின் பெரும்பகுதியில் வீடுகளின் ஜன்னல் கதவுகள் மற்றும் பொருட்கள் நில அதிர்வால் குலுங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய நிலநடுக்கம் கிரிண்டாவிக்க்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
வடக்கு-தெற்காக கிரின்டாவிக் செல்லும் சாலை நிலநடுக்கத்தால் சேதமடைந்த அடுத்து வெள்ளிக்கிழமை போலீஸார் அந்தப் பாதையை மூடினர்.
இந்த ஆண்டின் அக்டோபர் பிற்பகுதியில் இருந்து ஐஸ்லாந்து தீபகற்பத்தில் சுமார் 24,000 நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்நாட்டு வானிலை மையத்தின் தகவல்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை பகல் 2 மணிவரை 14 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 800 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளிக்குத் தங்கம் வாங்கப் போறீங்களா? டிஜிட்டல் கோல்டு ஆஃபரைப் பாத்துட்டு பர்சேஸ் பண்ணுங்க!