ஒத்த பைசாகூட திருப்பி கொடுக்க முடியாது... சீனாவையே திணற வைத்த இந்தியா கோடீஸ்வரர்...!!
இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள அணில் அம்பானி தற்போது உள்ள சூழலில் தனது வாங்கி முதலீடு மதிப்பு வெறும் 800 கோடிதான் எனவும் தெரிவித்துள்ளார் .
தற்போதுள்ள நிலையில் தன்னால் ஒரு பைசாவை கூட திருப்பி செலுத்த முடியாது என சீன வங்கிகளுக்கு உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான அனில் அம்பானி கைவிரித்துள்ளார். பல வங்கிகளில் கடன்பெற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த ஆண்டு திவால் நோட்டீஸ் கொடுத்திருந்த நிலையில் அம்பானி இவ்வாறு கூறியுள்ளார் . உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார் அனில் அம்பானி , இவரும் இவரது சகோதரர் முகேஷ் அம்பானியும் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம் . அந்த அளவிற்கு உங்கம் முழுக்க தங்களது ஆக்டோபஸ் கரங்களை பரப்பியுள்ளனர்.
பல்வேறு சர்வதேச வங்கிகளிலிருந்து கடன் வாங்கியுள்ள அம்பானி தனது தொழிலில் ஏற்பட்ட திடீர் சரிவு காரணமாக தன்னுடைய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் ஆனது என நோட்டீஸ் அறிவித்திருந்தார் . இந்நிலையில் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வங்கியில் பெற்ற 6 ஆயிரம் கோடி கடன் தொகையில் 5 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்த கோரி லண்டன் நீதிமன்றத்தில் 3 சீன நாட்டு வங்கிகள் வழக்கு தொடுத்துள்ளன. இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள அணில் அம்பானி தற்போது உள்ள சூழலில் தனது வாங்கி முதலீடு மதிப்பு வெறும் 800 கோடிதான் எனவும் தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் நிலுவையில் உள்ள கடனுக்கு அசையும் சொத்து, அசையா சொத்து என எந்த உத்தரவாதமும் அளிக்காததால் தற்போது ஒரு பைசா கூட தன்னால் திருப்பிச் செலுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார் . இதற்கிடையில் மற்றொரு பிரச்சனையாக எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய தொகையை செலுத்தத் தவறினால் சிறை செல்ல நேரிடும் என அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவரது சகோதரர் முகேஷ் அம்பானி தலையிட்டு அனில் அம்பானியை காப்பாற்றியது குறிப்பிடதக்கது.