இங்கிலாந்தில் வசித்து வரும் மிதேஷ் படேல் என்பவர் ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிதேஷ் படேலுக்கு வயது 37. அவரது மனைவி ஜெசிகா படேலுக்கு வயது 34.  இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென ஜெசிகா மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து  கிடந்துள்ளார். இது குறித்து மிதேஷ் படேலிடம் விசாரணை மேற்கொண்ட போது,  தொடக்கத்தில் இந்த கொலை தான் செய்யவில்லை என உறுதியாக மறுத்து உள்ளார்.

பின்னர் தான் தெரியவந்துள்ளது... அவர் ஓரின சேர்க்கையில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும் அதற்காக, பல செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்து அதன் மூலம் பல பேரிடம் பேசி பழகி வந்துள்ளது தெரிய வந்து உள்ளது.மேலும் மிதேஷ், டாக்டர் அமித் படேலுடன் ஓரின சேர்க்கைக்காக பழகி வந்து உள்ளார். இவர்கள் இருவரின் நட்பு அதிகரித்து ஒரு கட்ட்டத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்து உள்ளனர்.

இதற்காக தனது மனைவியை கொலை செய்துவிட்டு, டாக்டர் அமித்  படேலுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்து.... எப்படி கொலை செய்வது..... என பல நாட்களாக திட்டம் போட்டு, அதற்காக கூகிள் சர்ச்சில்  அதிகம் தேடி வந்து உள்ளார் மிதேஷ்.இந்த வழக்கை 3 பெண்கள், 3 ஆண்கள் அடங்கிய ஜூரி குழு தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து மிதேஷ் குற்றவாளி என்று அறிவித்து உள்ளனர்.இவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.