இலங்கையில் அவசரகால சட்டம் மனித உரிமை மீறல்... மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்!!

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமை ஆணையக்குழு தெரிவித்துள்ளது. 

human rights commission condemns emergency law in sri lanka violates human rights

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமை ஆணையக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கை கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பால், சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது.

human rights commission condemns emergency law in sri lanka violates human rights

டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன. இந்த பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடி நடத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

human rights commission condemns emergency law in sri lanka violates human rights

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார். இதனிடையே இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என்று இலக்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை உறுதிப்படுத்தாமல் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து அதிகளவிலான மக்கள் படகு மூலம் ராமேசுவரம் வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து அதிகளவிலான மக்கள் படகு மூலம் ராமேஸ்வரம் வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விபத்துகளில் நேரிடுகின்றன. எனவே இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமை ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios